குல்பர்கா னு ஒரு ஊரு கர்நாடகாவோட வடக்கு ல இருக்கு…. ஒரு 750 km சென்னை ல இருந்து….. கர்நாடகா-னு சொன்னா உடனே எல்லாருக்கும் அந்த திதிச்சு வழியுற சாம்பார் தான் ஞாபகம் வரும்… அப்படி ஞாபகம் வராதவங்க http://www.epomesoruthan.com website ல போய் பாருங்க புரியும்.
பெங்களூர், மைசூர் தாண்டி பெருசா எங்கயும் போனதில்ல. இந்த குல்பர்கா ஊர் போகவேண்டிய ஒரு சந்தர்ப்பம், சோ போனேன். உருது ல குல்பர்கா அப்டின்னா பூக்களுக்கான ஊரு னு அர்த்தம். சரி அதெலாம் எதுக்கு (சும்மா ஒரு லீட்க்கு தான் 😛 )
அங்க போய் எங்க தங்கணும் எங்க சுத்தி பாக்கணும் னு லாம் நீங்க decide பண்ணிக்கோங்க, ஆனா நான் போனது ஜனதா சிற்றுண்டி (Refreshment) அப்படின்ற இடத்துக்கு. அங்க போய் என்ன லாம் நீங்க சாப்பிட்றதுக்கு இருக்கு னு சொல்றேன் பிகாஸ் நமக்கு எப்போமே சோறுதான் 🙂

சவுத் இந்தியா ல ட்ராவல் பண்றப்போ நமக்கு எப்போமே காலைல tiffin கொஞ்சம் பெஸ்ட்டா கிடைக்கும் அது ஒரு திருப்தி அந்த சைடு நாம ஊர் சுத்தறப்ப.

அங்க மாக்ஸிமும் எல்லாமே self serviced ஆ தான் இருக்கு. நம்ம சென்னை ல இருக்கிற மாறி அங்க செட் தோசை கூட உண்டு & காலைல அங்க டிபன்க்கு அங்க ரைஸ் பாத் அண்ட் சிரா (நம்மூர் கேசரி தான்) தராங்க. இதே விஷயத்தை பெங்களூர்லையும் பாத்து இருக்கேன்! இங்கே Token ஸிஸ்டம் தான் இன்னும் இருக்கு.


அங்க இட்லிய நல்லா சாம்பார் ல முங்கி போற அளவுக்கு ஒரு தட்டு ல தரான் & அந்த சாம்பார் நான் நினைச்சு போனா மாறி ஸ்வீட்டா இல்ல, நல்லா காரமா ஆந்திரா க்கான ட்ரெட் மார்க்கோட இருந்தது. 25 ரூபாய்க்கு அவன் அவ்ளோ சாம்பார் கொடுக்கறது கொஞ்சம் ஜாஸ்தி தான். தண்ணி தான் தர மாட்டேங்குறானுங்க, சாம்பார் நிறையவே தரானுங்க (:P)! சாம்பார் பத்தி சொல்லிட்டு இட்லி ய மறந்துட்டேன் பாத்திங்களா. இட்லி சும்மா குஷ்பூ மாறி இருந்தது னா பாத்துகோங்களேன். அதுக்கு ஏத்த சுந்தர். சி சைஸ் க்கு போண்டா ஆப்போசிட் ல அடுக்கி வச்சு இருந்தானுங்க.

இங்க தான் உப்மா செஞ்சு கடுப்பேத்தறாங்க னு பாத்தா அங்கேயும் உப்மா யுவர் ஆனர். மனுஷன் திம்பான அத, ஆனா நான் தின்னேன் – 25 ரூபாய் ( இத எதுக்கு சொல்றேன்னா இன்னும் உப்மா வ விரும்பி சாப்பிடற ஜீவன் கொஞ்ச பேர் இருக்க தான் செய்றாங்க).

அங்க உப்மா க்கு சாம்பாரும் சட்னியும் தராங்க. நான் வீட்ல செய்றப்ப சக்கரை தொட்டு ஒப்பேத்துவேன் நீங்களும் வேற வழி இல்லனா சக்கரை வைத்து ஒப்பேத்திக்கொள்ளலாம் நல்லா தான் இருக்கும்.

இங்க இன்னொரு இன்டரெஸ்டிங்கான மேட்டர் என்ன னா பூரி க்கு வழக்கம் போல இவங்க கிழங்கு கொடுக்கறது கிடையாது மாறா ஒரு குருமா தராங்க.

குருமா அப்டி னு சொன்னா உடனே காரசாரமா யோசிக்காதிங்க. லேசான பூரி க்கு perfect ஆ இருந்தது. கூட கொஞ்சம் சட்னியும் கொடுத்தான். அருமையா இருந்தது. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பூரி – 40 ரூபாய். இன்பமாய் இருக்குதைய்யா னு மனசுக்குள் background ல யாரோ சொல்லிட்டே இருந்தாங்க சாப்பிடும் போது 🙂
சரி ரைஸ் பாத் க்கு வருவோம்.

ரைஸ் பாத் டேஸ்ட்ல நீங்க மயங்கிதான் போவீங்க, யப்பா யப்பா யப்பா சும்மா தல தல னு நெய் விட்டு அது மேல பூந்தியை தூவி, ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்னமா இருக்கு எனக்கு சொல்ல வார்த்தை வரல. ஒரு முறை நீங்க சாப்பிட்டு பாருங்க. அப்போ தெரியும் நான் இப்படி வாயாடிச்சி போனா காரணம். ஒரு ரைஸ் பாத் சாப்பிட்டீங்கன்னா பாதி நாள் ஒட்டிடலாம் அவ்ளோ திருப்தியா நிறையவே சாப்பிடற அளவுக்கு கொடுக்குறான்!
ஆனா அதுக்கு அவன் என்ன கருமத்துக்கு பச்சடியும் சட்னியும் தந்தான் னு தான் இப்போ வர தெரியல. நானு அவன் ஏதோ புதுசா ட்ரை பண்றான் னு நினச்சு ஒரு ஸ்பூன் சட்னி கூடணும் ஒரு ஸ்பூன் பச்சடி கூடணும் சாப்பிட்டு பாத்தேன் செட் ஆகல. ஆனா நல்ல வேலைய நம்மூர் ஹோட்டல் காரன் மாறி மெயின் டிஷ் மேலயே சைடுடிஷ்ஷ கொட்டாம தனித்தனியா கொடுத்தான் அது வரை தப்பிச்சேன் டா சாமி னு இருந்தது.
கடைசியா தயிர் வடை.

வழக்கமான தயிர் வடையா இல்லாம இவங்க கொஞ்சம் அந்த தயிர் ல ஏதோ மசாலா போடறாங்க. பட் அந்த டேஸ்ட் நல்லாவே இருந்தது.
சோ அடுத்த முறை நீங்க குல்பர்கா போனீங்கன்னா கண்டிப்பா இந்த ஜனதா சிற்றுண்டி ய ட்ரை பண்ணுங்க. இத அவங்க கொடுக்கற இந்த டேஸ்ட்டான சாப்பாட்டுக்காக மட்டும் இல்ல, நம்ம கைய கடிக்காத அளவுக்கு பாக்கெட் friendly உம் கூட!

நான் சாப்பிட மொத்த food ஓட cost,
இட்லி – 25 ரூபாய்
வடை – 25 ரூபாய்
பூரி – 40 ரூபாய்
உப்மா – 25 ரூபாய்
ரைஸ் பாத் – 35 ரூபாய்
தயிர் வடை – 25 ரூபாய்
நீங்களே கணக்கு போட்டுக்கோங்க நான் கொஞ்சம் கணக்குல வீக். இத்துடன் குல்பர்கா Episode நிறைவடைந்தது. லைக், பகிர், பதிவு செய்யுங்கள் கீழே உள்ள இணைப்புகளை.
இந்த வலைப்பதிவை தமிழாக்கம் செய்து குடுத்த அகிலாவிற்கு (Akilaa Ganesh) நெஞ்சார்ந்த நன்றிகள் ❤
Instagram – http://www.instagram.com/epomesoruthan
Youtube – http://www.youtube.com/c/epomesoruthan